டாக்ஸிக் படத்தை தேர்வு செய்தது ஏன்? நடிகர் யஷ் விளக்கம்! MakkalPost

வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க வேண்டும்!
வாழ்க்கையில் ஆபத்து எடுப்பது எனக்கு பிடிக்கும். இல்லாவிட்டால் வாழ்க்கை மிகவும் சோம்பலாக இருக்கும். எதையாவது புதிதாக செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதும் இருக்கிறது. அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி போல நான் ரிஸ்க் எடுக்க விரும்புகிறேன். அதிலிருந்து எதையாவது கற்றுக்கொள்ள அல்லது பெரியதாக வெற்றிபெற விரும்புகிறேன்.
படப்பிடிப்புதான் முக்கியம். மேலும், நம்பிக்கை மிகவும் முக்கியம். ரசிகர்களின் நேரத்தினையும் ரசனையையும் மதிக்கிறேன்.
நீங்கள் எல்லோரும் நினைப்பதுபோல கீது மோகன்தாஸ் இல்லை. அவரால் மாஸ் கமர்சியல் படத்தையும் இயக்க முடியும். மிகவும் சுவராசியமான படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பல பெண்கள் இருக்கிறார்கள். ஆனால், யார் யார் என்று சொல்லமாட்டேன் என்றார்.