April 19, 2025
Space for advertisements

சிங்கப்பெண்ணே பாடலில் என்ன சிறப்பு? நெட்டிசன்கள் கேள்வி MakkalPost


மூன்றாம் தடவையாக விஜய் – அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் படம் பிகில். நயன்தாரா, யோகி பாபு, கதிர், இந்துஜா, ஷாக்கி ஷெராஃப், நாசர், விவேக் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். பிகில் படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் முவிடில் இறுதி கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடக்கும் என்றனர் படக்குழுவினர்.

பெண்களை சிறப்பிக்கும் வகையில் உருவாகியுள்ள ‘சிங்கப் பெண்ணே’ எனும் பிகில் படப் பாடல் அண்மையில் ஏ.ஆர்.ரஹ்மானால் அவரது ட்விட்டர் பக்கத்தில்
வெளியிடப்பட்டது. பாடல் ஆசிரியர் விவேக் எழுதிய இப்பாடல் வெளியான சில மணி நேரத்தில் அது வைரலாகியது. இந்தப் பாடல் ரசிக்கும் வகையில் இருந்தாலும், இது அவருடைய முந்தைய படப் பாடல்கள் பலவற்றைப் போலவே உள்ளது என்று நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் பகிர்ந்தனர்.

இன்னும் சில தீவிர ரசிகர்கள் இப்பாடலின் ரிஷிமூலத்தை கண்டறிந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த ஹாலிவுட் படமான பீலே படத்தில் ஜிங்கா என்ற பாடலை பாடியிருந்தார். சிங்கப்பெண்ணே பாடல் ஜிங்காவை நினைவுபடுத்தத் தவறவில்லை என்கிறார்கள் அந்த நெட் இசை ஆர்வலர்கள். சிலர் இக்கருத்தை ஆதரித்தும் சிலர் எதிர்த்தும் பதிவிட்டு வருகிறார்கள். எது எப்படியோ இந்தப் பாடல் பல தரப்பு ரசிகர்களை கவர்ந்துவிட்டது என்பது மிகையில்லை.



Source link

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Space for advertisements

You may have missed