Tamil Live Breaking News: அசாமில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – News18 தமிழ்

உங்கள் நகரத்தைத் தேர்ந்தெடுக்கவும்
நிலை
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்.
ஐபிஎல் போட்டிகளை Fairplay செயலியில் சட்ட விரோதமாக ஒளிபரப்பிய வழக்கில், அச்செயலின் விளம்பர தூதரான நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
Fairplay செயலியில் ஐபிஎல் போட்டிகள் பார்ப்பதை ஊக்குவித்ததாக நடிகை தமன்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான விக்னேஷ்குமார், விஜயகுமார், சதீஷ் குமார் ஆகியோர் ஜாமின் கோரி மனு அளித்துள்ளனர். இதில் காவல்துறை விளக்கமளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஜாமீன் மனு மீதான விசாரணை அக்டோபர் 19ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவு.
அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர். ஆளுநர் அதனை மீற முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவு.
ஆயுள் தண்டனை கைதி வீரபாரதி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி மனு அளித்திருந்த நிலையில், முன்கூட்டியே விடுவிக்கும் தமிழக அரசின் பரிந்துரையை ஆளுனர் நிராகரித்திருந்தார்.
இந்த நிலையில், மனுதாரரை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் மனுவை மீண்டும் பரிசீலிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அசாம் ரயில் விபத்தில் பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர் என அசாம் மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் 03674 263120, 03674 263126 என்ற எண்கள் உதவி எண்களாக அறிவித்துள்ளார் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா.
அசாம் ரயில் விபத்தில் 8 ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகவும், இந்த விபத்தில் பயணிகளுக்கு எந்த உயிரிழப்பும் இல்லை என்றும் அசாம் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து ரயில் அதிகாரிகளை தொடர்புகொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
2024 – 2025 ஆம் ஆண்டில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் 68,569 வீடுகள் கட்ட முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஒரு வீட்டுக்கு ரூ. 1.20 லட்சம் என்ற அடிப்படையில் முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பங்கு 125 கோடி மற்றும் மாநில அரசின் பங்குத் தொகை 83 கோடி என்று மொத்தம் 209 கோடி ஒதுக்கீடு செய்து ஊரக வளர்ச்சிதுறை அரசாணை வெளியிட்டுள்ளது.
வேளச்சேரி மேம்பாலங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளர்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்ல தொடங்கியுள்ளனர். காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததுடன், ரெட் அலெர்ட் வாபஸ் பெறப்பட்டு, இன்று காலை வெயில் அடிக்கத் தொடங்கியதால், உரிமையாளர்கள் கார்களை எடுத்துச் செல்கின்றனர்.
#JUSITN
சென்னையில் மழை விட்டதை தொடர்ந்து, வேளச்சேரி மேம்பாலம் மீது
பார்க்கிங் செய்திருந்த கார்களை எடுத்துச்செல்லும் உரிமையாளர்கள் #Velacherry #CarParking #News18tamilnadu | https://t.co/7dpn9FCtgj pic.twitter.com/q7ef7BJfGX
Follow us on
Download News18 App