Tamil Live Breaking News: அசாமில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – உயிர்சேதம் இல்லை! – News18 தமிழ்

உங்கள் நகரத்தைத் தேர்ந்தெடுக்கவும்
நிலை
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்.
பராமரிப்பு பணி காரணமாக தமிழ்நாட்டின் முக்கிய பகுதிகளில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மின் தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்…
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று முழுவதும் மழை பெய்யாத நிலையில் அதிகாலை மழை பெய்யத் தொடங்கியுள்ளது. நுங்கம்பாக்கம், வடபழனி, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது. தாம்பரம், குரோம்பேட்டை, பெரும்பாக்கம், சோலையூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் மழையை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளும் விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு நிலவிய நிலையில், சென்னையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.
அக்டோபர் 20 ஆம் தேதி வடக்கு அந்தமான் கடற்பகுதியில் ஒரு புதிய மேல் காற்று சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. அதன் தாக்கத்தால், மத்திய வங்கக்கடலில் அக்டோபர் 22ம் தேதியன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதன்பின், அது வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கேரளா மற்றும் மாஹே, லட்சத்தீவு, கர்நாடகா ஆகிய பகுதிகளில் ஓரளவுக்கு பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் இந்த வாரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி & காரைக்கால், கடலோர ஆந்திரப் பிரதேசம் & ஏனாம், ராயலசீமா, தெலுங்கானா ஆகிய இடங்களில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கேரளா & மாஹே 22 & 23 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Follow us on
Download News18 App