மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா பயணிகளின் கூட்டம் MakkalPost

மாமல்லபுரத்தில் வெளிநாட்டுச்சுற்றுலா பயணிகளின் கூட்டம் திங்கள்கிழமை வழக்கத்தைவிட அதிகரித்து காணப்பட்டது.
சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கும் மாமல்லபுரத்தில் நாளொன்றிற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். விடுமுறை நாட்களில் இங்குள்ள முக்கிய புராதனப் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் களை கட்டி காணப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி, மாமல்லபுரத்தில் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இந்நிலையில், இங்குள்ள சுற்றுலாப் பகுதிகளான ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு, கடற்கரைக் கோயில், வராக மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அவர்கள், பல்லவர் கால சிறப்புகளுக்கு அருகே புகைப்படம் மற்றும் சுயபடம் எடுத்து மகிழ்ந்தனர்.
வெண்ணை உருண்டைப் பாறையை தாங்கிப் பிடித்து நிற்பது போல் புகைப்படம் எடுத்தனர். கடலில் மாலை நேரத்தில் கடலில் குளித்து மகிழ்ந்தனர். அவர்களின் வருகையால் மாமல்லபுரம் நகரம் களைகட்டி காணப்பட்டது. உணவு விடுங்கள், குளர்பானக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. தொப்பி மற்றும் கூவி விற்கும் சிறுவியாபாரிகள் என அனைவருக்கும் வர்த்தகம் நன்றாக நடைபெற்றது.
கடற்கரைக் கோயிலைப் பார்த்துவிட்டு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்.