மர்மதேசம் சீரியல் இயக்குநரின் புதிய இணையத் தொடர்! MakkalPost

சாய் தன்ஷிகா நடித்துள்ள ஐந்தாம் வேதம் என்ற இணையத் தொடர் நாளை (அக். 25) ஓடிடியில் வெளியாகிறது.
திகில் மற்றும் மாயாஜாலத் தொடர்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். அந்தவகையில், 90களில் ஒளிபரப்பான பிரபல திகில் தொடர் மர்மதேசம். இத்தொடரை நாகா இயக்கியிருந்தார். இத்தொடரில் பிரதான பாத்திரத்தில் சேத்தன் மற்றும் தேவதர்ஷினி நடித்திருந்தனர்.
தொடர்ந்து, வீட்டுக்கு வீடு லூட்டி, யாமிருக்க பயமேன், ரமணி வெஸ் ரமணி உள்ளிட்ட தொடர்களை இயக்கியிருந்தார்.
இவர் தமிழ் சினிமாவில் ஆனந்தபுரத்து வீடு என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தற்போது, இவர் ஐந்தாம் வேதம் என்ற புதிய இணையத் தொடரை இயக்கியுள்ளார்.