தக் லைஃப் வெளியீட்டுத் தேதி – தகவல்! MakkalPost

தக் லைஃப் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் கடந்தாண்டு துவங்கப்பட்ட திரைப்படம் தக் லைஃப். கேங்ஸ்டர் பின்னணியில் எழுதப்பட்ட இக்கதையின் படப்பிடிப்பு சென்னை, தில்லி, ரஷியா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்றது.
படப்பிடிப்பின்போது நடிகர் ஜோஜூ ஜார்ஜுக்கு காலில் காயம் ஏற்பட, முக்கியக் காட்சிகள் எடுப்பதில் தாமதமானது. இறுதியாக, சில நாட்களுக்கு முன் முழுமையாகப் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

நடிகர்கள் கமல்ஹாசன், நாசர், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: ஸ்பைடர் மேன் – 4: ரிலீஸ் தேதி..!
இந்த நிலையில், படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.