June 9, 2025
Space for advertisements

உணவில் சேர்த்துக் கொள்ளும் சர்க்கரை அளவை குறைப்பது எப்படி? MakkalPost


வெள்ளை நிற உணவுகள் மனிதனுக்குப் பகை, எனவே பச்சை நிற உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

வெள்ளை நிற உணவில் முதலில் பகையாக இருப்பது சர்க்கரை. அது இனித்தாலும், மனிதனுக்கு பல கசப்பான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

சர்க்கரையை நேரடியாகவோ மறைமுகமாகவோ மனிதர்கள் உட்கொண்டுதான் வருகிறார்கள். சர்க்கரை நேரடியாக ஏற்படுத்தும் பெரும் தொந்தரவு என்றால் அது நீரிழிவு. மறைமுகமாக எத்தனையோ.

சரி இவ்வளவு துயரத்தைக் கொடுக்கும் சர்க்கரையை உணவில் இருந்து எவ்வாறு குறைப்பது?

இதற்கு சில வழிகாட்டுதல்களை உணவுப் பாதுகாப்பு தரக் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ளது.

வாருங்கள் பார்ப்போம்
1. குளிர்பானங்களை அறவே தவிர்க்க வேண்டும். அதற்கு மாறாக இளநீர், மோர், சர்க்கரை இல்லாமல் பழச்சாறுகளை அருந்தலாம்.

2. தினமும் தேநீர், காபி குடிப்பதற்கு பதிலாக, உப்பு கலந்த கஞ்சி, எலுமிச்சை சாறு, சூப் போன்றவற்றை தேர்வு செய்யலாம்.

3. பண்டிகைக் காலங்களில் இனிப்பு பலகாரங்களைச் செய்யும் போது, ​​சரியான அளவில் சர்க்கரையைச் சேர்க்காமல், பாதி அல்லது முக்கால் பங்கு சர்க்கரையைப் பயன்படுத்துங்கள்.

3. எப்போதாவது இனிப்பாக எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் உடனே வாழைப்பழம், ஆப்பிள், பப்பாளி, திராட்சைப் போன்ற பழங்களை நறுக்கி சாப்பிடுங்கள். அவையும் இனிப்பாகவே இருக்கும்.

4. உணவுகளுக்கு சாஸ் போன்றவற்றை தொட்டுக் கொள்வதற்கு பதிலாக சட்னியை செய்து கொள்ளுங்கள்.

5. இனிப்புக்காக சர்க்கரை சேர்த்து சாப்பிடும் உணவுகளில் பேரீட்சம் பழம் போன்ற இனிப்பான உலர் உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம் என்று சுட்டுரைப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில்லாமல், நாம் நடைமுறையில் சில விஷயங்களை மாற்றலாம்.

6. தேநீர் மற்றும் காபியில் சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டியை சேர்த்து பருகுங்கள். பழக்கம் இல்லாதவர்கள் வாரத்தில் சில நாட்களேனும் முயற்சி செய்யலாம்.

7. இட்லி, தோசை, உப்புமா, இடியாப்பத்துக்கு சிலர் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவார்கள். அதுபோன்ற பழக்கம் உடையவர்கள் நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்தலாம்.

8. தேங்காய்பால் தயாரிக்கும் போதும், புட்டு தயாரிக்கும் போதும் சர்க்கரைக்கு பதிலான நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்தலாம். புட்டில் சர்க்கரை அளவை குறைத்துவிட்டு பழங்களுடன் சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்ளலாம்.

9. நீரிழிவு நோய் இல்லாதவர்களும் சரியான அளவில் சர்க்கரையை எடுத்துக் கொள்ளாமல் பாதி அளவுக்கு சர்க்கரையைப் உணவில் சேர்க்கலாம்.

10. இனிப்புகளை சாப்பிடும் அளவுக்கு கசப்பு மற்றும் துவர்ப்பான உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.



Source link

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Space for advertisements

You may have missed