April 19, 2025
Space for advertisements

இந்திய அணியை வென்று கனவை நிஜமாக்கியுள்ளது நியூசிலாந்து… மனதார பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்… MakkalPost


இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றுள்ள நியூசிலாந்து அணிக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

புனேவில், நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

உள்ளூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் கடந்த 12 ஆண்டுகளாக தொடரை இழக்காத இந்திய அணி இந்த முறை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்திடம் தொடரை இழந்து தனது 12வது ஆண்டு ரெக்கார்டை முடிவுக்கு வந்துள்ளது.

விளம்பரம்

இந்த போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களும், 2-ஆவது இன்னிங்ஸில் 255 ரன்களும் எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி விளையாடியது.

இந்திய அணியில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டும் அதிரடியாக பேட்டிங் செய்து 65 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ரவீந்திர ஜடேஜா 42 ரன்களும், சுப்மன் கில் 23 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 21 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இந்திய அணி 60.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் மட்டுமே எடுத்து 113 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இதையும் படிங்க – புனே டெஸ்ட் தோல்வி… உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்திய அணிக்கு ஆபத்து

வெற்றி பெற்றதற்காக நியூசிலாந்து அணிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது-

இந்தியாவுக்கு வந்து டெஸ்ட் போட்டியில் விளையாடும் எந்தவொரு அணிக்கும் தொடரை கைப்பற்ற வேண்டும் என்பது கனவாக இருக்கும். அதனை நியூசிலாந்து அணி தனது சிறப்பான ஆட்டத்தால் சாத்தியப்படுத்தி உள்ளது.

விளம்பரம்

பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து தரப்பிலும் சிறப்பாக விளையாடியதால்தான் இந்திய அணியை நியூசிலாந்தை வீழ்த்த முடிந்தது. குறிப்பாக 13 விக்கெட்டுகளை கைப்பற்றிய சான்ட்னரை பாராட்டியே ஆக வேண்டும். இந்திய மண்ணில் சாதித்த நியூசிலாந்து அணிக்கு பாராட்டுகள். என்று தெரிவித்துள்ளார்.

.





Source link

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Space for advertisements