ஆசிய சாம்பியன்ஷிப் பென்காக் சிலாட் போட்டி: வெண்கலம் வென்ற விழுப்புரம் மாணவன் MakkalPost

உஸ்பெஸ்கிதானில் நடைபெற்ற எட்டாவது சேம்பியன்ஷிப் பென்காக் சிலாட் போட்டியில் வெண்கலம் வென்று வீடு திரும்பிய மாணவருக்கு உறவினர்கள் மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தோனேசியாவின் தற்காப்பு கலையான பென்காட் சிலாட் போட்டியானது, தமிழகத்தில் தற்காப்புக்கலையாக உள்ளது. 2018 ஆம் ஆண்டு முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்த பென்காக் சிலாட் போட்டி சேர்க்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஆசிய அளவிலான போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இது ஒரு முழு-உடல் சண்டை வடிவமாகும். இது ஆயுதங்களுடன் கூடுதலாக வேலைநிறுத்தங்கள், சண்டையிடுதல் மற்றும் வீசுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. உடலின் ஒவ்வொரு பகுதியும் பயன்படுத்தப்படுகிறது மற்றும் தாக்குதலுக்கு உட்பட்டது. பென்காக் சிலாட் விளையாட்டு, உடல் பாதுகாப்பிற்காக மட்டுமல்ல, உளவியல் நோக்கங்களுக்காகவும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
தற்போது இந்த விளையாட்டு பல இடங்களிலும் நவீனம் பெற்று, புதுப்புது விளையாட்டு வீரர்கள் உருவாகி சாதனை படைத்து வருகின்றனர். அந்தவகையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள பொன்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பழனி மற்றும் பார்வதி தம்பதியரின் மகனான மோகனவேல்(18) என்ற கல்லூரி மாணவர் சென்னையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில், இளங்கலை விளையாட்டுப் பயிற்சி என்ற பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இதையும் வாசிக்க : தேங்காய் பூவில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா ? என்னென்ன தெரியுமா ?
இம்மாணவன் கடந்த வாரம் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற எட்டாவது ஆசிய சாம்பியன்ஷிப் பென்காக் சிலாட் போட்டியில் கடந்த 16 ஆம் தேதி பங்கேற்றிருந்தார். இந்த விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பாக 37 நபர்கள் பங்கு பெற்றனர். அதில் தமிழகத்தில் இருந்து ஏழு பேர் சென்றிருந்தார்கள். அந்த விளையாட்டில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மோகனவேல் மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த போஸ் ராஜகுரு என்ற இருவரும் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
வீடு திரும்பிய வெற்றி வீரர் மோகனவேலுக்கு விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மேல தாளம் முழங்க பட்டாசு வெடித்தும், மாலை அணிவித்தும் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.இந்த வெற்றி குறித்து மோகனவேல் கூறினார், சிறு வயது முதலே மார்ஷல் ஆர்ட்ஸ் மீது அதிக ஆர்வம் காட்டப்பட்டது. படித்த பள்ளியில் ஒருவர் வந்து கூறினார்கள்.
நானும் எந்த ஒரு ஆர்வமும் இல்லாமல் இந்த விளையாட்டில் கலந்து கொண்டேன்.போன முதல் கேம்லயே தோத்து அடி வாங்கிட்டு வந்தேன். ஆனா அதுக்கப்புறம் இந்த விளையாட்டில்ல ஜெயிச்சு ஆகணும்னு முடிவு செய்து , கடின முயற்சியில் ஈடுபட்டேன். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 6 மணி நேரம் இந்த விளையாட்டிற்காக செலவு செய்வேன்.
அதன் பிறகு 20க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு பல போட்டிகளில் வெற்றி பெற்றேன். கோவாவில் நடைபெற்ற தேசிய அளவில் கலந்து கொண்டு வெண்கலம் பரிசு பெற்றேன். தற்போது உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 8-வது ஆசிய சேம்பியன்ஷிப் பென்காக் சிலாட் போட்டியில் கலந்துகொண்டு இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்று உள்ளேன். இந்த வெற்றியை இதனுடன் நிறுத்தாமல் தங்கப் பதக்கம் வெல்வதற்கான கடின உழைப்பில் ஈடுபடுவேன் என மோகனவேல் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.