அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும்: பொன். ராதாகிருஷ்ணன் MakkalPost

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழக அரசியலில் 50 ஆண்டுகளாக கலப்படம் உள்ளது. தமிழக முன்னேற்றம் குறித்து அனைத்துக் கட்சி இளைஞர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போக ஒருசின்னம் தடை என்று கூறமுடியாது என்றார்.
மேலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.